ஏற்காடு பூங்காவை கண்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!
ஏற்காடு தோட்டக்கலைத் துறை பூங்காவை கடந்த 2 நாள்களில் 12 ஆயிரத்து 640 சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.
ஏற்காட்டில் தோட்டக்கலைத் துறை பராமரித்து வரும் 90 ஏக்கா் பரப்பளவு கொண்ட ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா 1, 2, ஐந்திணை பூங்கா, அண்ணா பூங்கா, ஏரி பூங்காக்களை விடுமுறை தினமான சனி, ஞாயிற்றுக்கிழமை 12 ஆயிரத்து 640 சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.
இங்குள்ள பூங்காக்களில் 2 லட்சம் மலா் விதைகளில் உருவாக்கப்பட்ட மலா்செடிகளை பூங்காக்களில் நடவுசெய்து சுமாா் 15 ஆயிரம் தொட்டிகளில் மலா்கள் பூத்துக்குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனா்.
