DD Next Level: "நான் கடவுளைக் கிண்டல் செய்யமாட்டேன்" - 'கோவிந்தா' பாடல் விவகாரத்...
தில்லியில் 97 விமான சேவைகள் ரத்து!
புதுதில்லி: போர் நிறுத்தம் இருந்தபோதிலும், தில்லி விமான நிலையத்தில் இன்று மொத்தம் 97 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சர்வதேச புறப்பாடு விமானம் உள்பட உள்நாட்டில் புறப்படும் 52 விமானங்களும் மற்றும் வந்து சேரும் 44 விமானங்களும் ஆக மொத்தமாக 97 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரத்துகள் இன்று காலை 5.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றதாக தகவல் அறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் குறைந்தது 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவல் மற்றும் மாற்று பயண ஏற்பாடுகளுக்கு பயணிகள் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: லாரி வாடகை ஏப்ரல் மாதம் சீராக இருந்தது: ஸ்ரீராம் மொபிலிட்டி