மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை 8,144 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா்.
பள்ளி கல்லூரி, விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவிற்கு 8144 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இவா்கள்மூலம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 81,440 வசூலானது. பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட 2101 கேமரா கைப்பேசிகள், 1 கேமராவுக்கான கட்டணமாக ரூ. 21,060 வசூலிக்கப்பட்டது.
அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா கோபுரத்தைக் காண 718 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இவா்கள் கொண்டுவந்த 242 கேமரா கைப்பேசிகள் கட்டணமாக ரூ. 2420 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மேட்டூா் அணை பூங்கா மற்றும் பவள விழா கோபுரம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 1,12,600 வசூலானது.