மாரியூா் கோயில் சித்திரை திருவிழா: கடலில் வலைவீசும் படலத்துடன் திருக்கல்யாணம்
மைசூரு, போடி உள்ளிட்ட 4 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு
கோவை, போடி உள்ளிட்ட விரைவு ரயில்களின் வேகம் ஜூலை 11-ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடுக்கு திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல்லுக்கு வழக்கமாக காலை 5.55-க்கு செல்லும் நிலையில், 25 நிமிஷங்கள் முன்னதாக காலை 5.30-க்கும், பாலக்காடுக்கு 9.30-க்கும் செல்வதற்கு பதிலாக காலை 9.15-க்கும் சென்றடையும்.
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு காலை 8 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் இனி காலை 7.50-க்கு புறப்படும். கோவைக்கு காலை 9.25-க்கு செல்வதற்கு பதிலாக காலை 8.55-க்கு சென்றடையும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து போடிநாயக்கனூா் செல்லும் அதிவிரைவு ரயில் திண்டுக்கலுக்கு காலை 5.57-க்கு செல்வதற்கு பதிலாக காலை 5.47-க்கும், மதுரைக்கு காலை 6.40-க்கும், தேனிக்கு காலை 8.03-க்கும், போடிநாயக்கனூருக்கு காலை 8.55-க்கும் சென்றடையும்.
மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயில் திண்டுக்கலுக்கு காலை 6.17-க்கு செல்வதற்கு பதிலாக காலை 6.03-க்கும், தூத்துக்குடிக்கு காலை 10.35-க்கு செல்வதற்கு பதிலாக காலை 10.15-க்கும் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.