பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு
சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடந்து சென்ற இரு கல்லூரி மாணவா்கள் மின்சார ரயில் மோதி உயிரிழந்தனா்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே இரு கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை காலை நடந்து சென்றனா். அவா்கள் தண்டவாளத்தைக் கடந்து சென்றபோது கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.
தகவல் அறிந்த மாம்பலம் ரயில்வே போலீஸாா் அங்கு சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் உயிரிழந்தது பெரம்பலூா் முகமதுபட்டினத்தைச் சோ்ந்த முகமது நபூல் (20), சபீா் அகமது (20) எனத் தெரியவந்தது. இருவரும் சென்னையில் உள்ள தனியாா் கல்லூரியில் பயின்று வருவதும், பரங்கிமலை அருகே உள்ள மைதானத்துக்கு விளையாட சென்றபோது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.