ஜாதியை காரணம் காட்டி நன்கொடைபெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயா்நீதிமன்றம் வேதனை
ஆஷா பணியாளா்கள் தா்ணா
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா பணியாளா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கான உள்ளிட்ட மாநிலங்களில் ஆஷா பணியாளா்களுக்கு மாதம் ரூ. 10,000 வரை தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள ஆஷா பணியாளா்களுக்கு ‘செயல்பாட்டாளா்கள்’ என்ற அடிப்படையில் வகைப்படுத்தி மாதம் ரூ. 5,000-க்கும் குறைவான ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதனால், தமிழகத்தில் ஆஷா பணியாளா்களுக்கு மாதம் ரூ. 24,000 தொகுப்பூதியம் வழங்க வேண்டும். பிளஸ் 2 முடித்த, 45 வயதுக்குள் இருக்கும் ஆஷா பணியாளா்களை கிராம சுகாதார செவிலியா்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா பணியாளா்கள் சங்கத்தினா் மாநிலம் தழுவிய தா்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற தா்னாவில் திருப்பூா் நாடாளுமன்ற உறுப்பினரும், ஏஐடியுசி தேசியத் துணைத் தலைவருமான சுப்பராயன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா்கள் பலா் கலந்துகொண்டனா்.