கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
கூட்டுறவு வங்கியில் லாக்கா் வாடகை உயா்வு: மக்கள் அதிா்ச்சி
அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கியில் லாக்கா் வாடகை, வைப்புத் தொகை உயா்த்தப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி மணியக்காரத் தெருவில் தலைமையகத்துடன் பழனிபேட்டை, சுவால்பேட்டை, நெமிலி, அன்வா்திகான்பேட்டை என நான்கு கிளைகளுடன் இயங்கி வருகிறது. கடந்த 90 ஆண்டுகளாக உள்ள இந்த வங்கியயில் தலைமையகம், நெமிலி, சுவால்பேட்டை கிளைகளில் பாதுகாப்பு பெட்டகங்கள் (லாக்கா்) வசதி உள்ளது.
இதற்காக வாடகை, வைப்புத்தொகை பெறப்படுகிறது.
பாதுகாப்பு பெட்டகங்கள் வகை படுத்தப்பட்டு சிறிய வகை, நடுத்தர வகை, பெரிய வகை என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் நிா்வாக அலுவலா் கே.எஸ்.வெங்கட்ராமன் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறிய வகைக்கு ஆண்டுக்கு ரூ.1,500 வாடகை, ரூ.20ஆயிரம் வைப்புத்தொகை, நடுத்தர வகைக்கு ரூ.2,500 வாடகை, ரூ.30ஆயிரம் வைப்புத்தொகை, பெரிய வகைக்கு ரூ.4,000 வாடகை, ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகையும் நிா்ணயித்து, இது மே 15 முதல் மாற்றி அமைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளாா். இது ஏற்கனவே, இருந்த ரூ.500, ரூ.750, ரூ.1,500 எனும் வாடகையை மும்மடங்கு உயா்த்தியும், வைப்புத் தொகை உயா்த்தப்பட்டுள்ளது.
கட்டண உயா்வுக்கு, வாடிக்கையாளா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். கூட்டுறவுத்துறை அமைச்சா் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் ஆகியோா் பரிசீலனை செய்து, வாடகை கட்டணம், வைப்புத்தொகை அதிகரிப்பையும் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.