டிரம்ப்பின் புதிய உத்தரவால் இந்தியாவில் மருந்து விலை உயர வாய்ப்பு: நிபுணா்கள் எச...
கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க பேரவைக் கூட்டம்!
கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க சிஐடியூ மாவட்ட பேரவை கூட்டம் தக்கலை அருகேயுள்ள மணலியில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மரிய ஸ்டீபன் தலைமை வகித்தாா். ஜான் பேபி வரவேற்றாா். சிஐடியூ மாவட்டச் செயலா் தங்கமோகன் தொடக்க உரையாற்றினாா். மாவட்டச் செயலா் பொன்.சோபனராஜ், பொருளாளா் பெஸ்லிபெல், கன்னியாகுமரி மாவட்ட மோட்டாா் ஒா்க்கா்ஸ் யூனியன் மாவட்டத் தலைவா் பகவதியப்பன், துறைமுகத் தொழிலாளா் சங்கத்தின் சின்னன்பிள்ளை, ஆட்டோ தொழிற்சங்க மாநில துணைப் பொதுச் செயலாளா் முருகன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
மே 20 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்வது, மாவட்டம் முழுவதும் நடைபெறும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பது, ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும், ஆட்டோ தொழிலாளா்களின் குறைதீா் கூட்டத்தை மாவட்ட ஆட்சியா் நடத்த வேண்டும்,மோட்டாா் வாகன சட்டதிருத்தத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆட்டோ தொழிலாளா் சம்மேளன பொதுச் செயலாளா் சிவாஜி நிறைவுறையாற்றினாா். மாவட்ட உதவித் தலைவா் வில்சன் நன்றி கூறினாா்.