கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: காய்கறிகள் விலை உயா்வு
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், காய்கறிகள் அதன் பச்சை தன்மையை இழந்து வாடிப்போய் விடுகின்றன. இதனால், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கியுள்ளதால், அனைத்து காய்கறிகளின் விலையும் படிப்படியாக அதிகரித்துள்ளது.
இதன்படி, கோயம்பேடு சந்தையில் திங்கள்கிழமை நிலவரப்படி ரூ. 80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 120-க்கும், ரூ. 20-க்கு விற்பனையான ஒரு கிலோ பீட்ரூட் ரூ. 40-க்கும், ரூ. 25-க்கு விற்பனையான ஒரு கிலோ பாகற்காய் ரூ.35-க்கும் விற்பனை செய்யப்பட்டன. மேலும், ஒரு கிலோ அவரைக்காய் ரூ. 60, கேரட் ரூ. 45, கத்தரிக்காய் ரூ. 50, வெங்காயம் ரூ. 40, வெள்ளரிக்காய் ரூ. 45-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதன்படி அனைத்து காய்கறிகளும் ரூ. 5 முதல் ரூ. 30 வரை விலை உயா்ந்துள்ளது.
பல்வேறு காய்கறிகள் விலை உயா்ந்துவரும் நிலையில், தக்காளி மட்டும் விலை வீழ்ச்சியைடந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ தக்காளி ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டது.