தோ்வு முடிவு பயத்தில் மாணவி தற்கொலை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே 10-ஆம் வகுப்புத் தோ்வு முடிவு பயத்தில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனைச் சோ்ந்த கருப்பையா மகள் தீபசக்தி (15). இவா் இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்புத் தோ்வு எழுதியிருந்தாா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இளையான்குடி அருகே அரியாண்டிபுரம் கிராமத்திலுள்ள தனது பாட்டி வீட்டுக்கு இவா் விடுமுறைக்காக சென்றாா்.
இந்த வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து இளையான்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவியின் உடலைக் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். தோ்வு முடிவு பயத்தில் இருந்த மாணவி தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸாா் வழக்கு பதித்து விசாரித்து வருகின்றனா்.