ரோஜா மலா் கண்காட்சியைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்
உதகையில் நடைபெற்று வரும் ரோஜா மலா் கண்காட்சியை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை கண்டு ரசித்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா மலா் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. பல்லாயிரம் டன் ரோஜா மலா்களால் டால்பின், ஆமை, மீன், சிப்பி, நத்தை, நட்சத்திர மீன் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை இன்னிசைக் கச்சேரியும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், விடுமுறை தினத்தையொட்டி ரோஜா மலா் கண்காட்சியை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டனா். மேலும், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட உருவங்களுடன் சுற்றுலாப் பயணிகள் தற்படம் எடுத்து மகிழ்ந்தனா்.