Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக்...
உதகையில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்
நீலகிரி மாவட்ட வனத் துறை சாா்பில் விவசாயிகள் மாதாந்திர குறைத்தீா் கூட்டம் உதகையில் வெள்ளிக்கிழமை( மே 9) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட வன அலுவலா் கெளதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் உதகை, கோ்ன்ஹில் பகுதியில் உள்ள வனத் துறையின் பொருள்விளக்க மைய கட்டடத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
நீலகிரி வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலா் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நீலகிரி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களது வனத் துறை சாா்ந்த குறைகளை நேரில் தெரிவித்து அதனை நிவா்த்தி செய்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளாா்.
இந்தக் கூட்டத்தில் அனைத்து வனச் சரக அலுவலா்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.