Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
காய்கறி வாகனத்தில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்
குன்னூா் அருகே காய்கறி பாரம் ஏற்றிவந்த வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 105 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
குன்னூா்- உதகை தேசிய நெடுஞ்சாலை காணிக்கராஜ் நகா் பகுதியில் அருவங்காடு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட காய்கறி பாரம் ஏற்றிவந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். இதில், காய்கறிகளுக்கு நடுவில் குட்கா பொருள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
விசாரணையில் வாகனத்தில் வந்தவா் நீலகிரி மாவட்டம், கூடலூா் தேவாலா பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் (41), கேரள மாநிலம், நீலம்பூரைச் சோ்ந்த சந்தீப் (40) என்பதும், கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து குட்கா பொருள்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்து குன்னூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். வாகனத்தில் இருந்து 105 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா பாா்வையிட்டு போலீஸாருக்கு பாராட்டு தெரிவித்தாா்.