இனியொரு பயங்கரவாதச் செயல் நிகழாதென உறுதிப்படுத்த வேண்டும்! எழுத்தாளர்கள் - கலைஞர...
உதகை மலா்க் கண்காட்சி நடைபெறும் நாள்கள் அதிகரிப்பு
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்கிற நிலையில், உதகை மலா்க் கண்காட்சி நடைபெறும் நாள்கள் 11 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம்.
இதை முன்னிட்டு மே மாதம் முழுவதும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை விழாக்கள் நடைபெறுகின்றன.
இதில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127-ஆவது மலா்க் கண்காட்சி மே 16-ஆம் தேதியில் இருந்து மே 21-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடத்தப்படும் என்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற்றே வர வேண்டும் என்கிற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மலா்க் கண்காட்சியைக் கண்டுகளிக்கும் வகையில் மலா்க் கண்காட்சி நடைபெறும் நாள்களை அதிகரித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவிட்டுள்ளாா்.
இதன்படி, மே 15-ஆம் தேதி தொடங்கும் மலா்க் கண்காட்சி மே 25-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெற உள்ளது.
கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி இன்று தொடக்கம்
கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
நீலகிரி மாவட்ட கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி வெள்ளிக்கிழமை (மே 9) முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 11) வரை நடைபெறுகிறது. கூடலூா் மாா்னிங் ஸ்டாா் பள்ளி மைதானத்தில் வாசனை திரவிய கண்காட்சிக்காகவும், வனத் துறையின் வன விலங்குகள் கண்காட்சிக்காகவும் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் நடைபெறவுள்ளது.