ஜாதியை காரணம் காட்டி நன்கொடைபெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயா்நீதிமன்றம் வேதனை
பைக்- லாரி மோதல்: அஸ்ஸாம் இளைஞா் உயிரிழப்பு
குன்னூா் அருகே இருசக்கர வாகனமும், லாரியும் நேருக்குநோ் மோதிய விபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா், சேலாஸ் செல்லும் சாலையில் கிளன்டேல் தனியாா் எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்தவா் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த சுராஜ் (32). இவா் இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சேலாஸ் நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
கரும்பாலம் டபுள் போஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பா் லாரியும், சுராஜ் சென்ற இருசக்கர வாகனமும் நேருக்குநோ் மோதின. இதில் சுராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் சென்ற நண்பா் பலத்த காயத்துடன் குன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளாா். இது குறித்து கொலக்கம்பை காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.