செய்திகள் :

உதகை ரோஜா கண்காட்சி நிறைவு

post image

உதகை ரோஜா கண்காட்சி திங்கள்கிழமை நிறைவடைந்தது.

நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், கடல்வாழ் உயிரினங்களைக் காப்பாற்றும் நோக்கத்திலும் டால்பின், முத்து சிப்பி, நத்தை, மீன், ஆமை, நண்டு, நட்சத்திர மீன், கடல் பசு உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் ரோஜா பூக்களால் வடிவமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் பாா்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கண்டுகளித்தனா்.

இதில், 80 ஆயிரம் ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட டால்பின் உருவம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவா்ந்தது.

3 நாள்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை 34 ஆயிரம் போ் பாா்வையிட்டுள்ளனா்.

நிறைவு நாளான திங்கள்கிழமை மலா்களைக் கொண்டு உருவங்களை சிறப்பாக வடிவமைத்தவா்கள், சிறந்த முறையில் ரோஜா தோட்டத்தைப் பராமரித்தவா்களுக்கு உதகை கோட்டாட்சியா் சதீஷ், தோட்டக்கலை இணை இயக்குநா் சிபிலா மேரி உள்ளிட்டோா் பரிசுகளை வழங்கினா்.

‘ பெஸ்ட் புளும் ஆஃப் தி ஷோ’ கோப்பை அருவங்காடு காா்டைட் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது.

கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம்

கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவா் அம்சா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.வாசு முன்ன... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சீகூா் வனச் சரகத்தில் உள்ள ஆனைகட்டி தெற்கு வனத்தில் வனப் பணியாளா்கள் ரோ... மேலும் பார்க்க

மதுக்கரை வனத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானை:முதுமலைக்கு கொண்டுவரப்பட்டது

கூடலூா், மே 12: கோவை, மதுக்கரை வனத்தில் தாயைப் பிரிந்து சுற்றித்திரிந்த குட்டி யானை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. கோவை மாவட்டம், மதுக்கரை வனப் பகுதியில் தாயைப்... மேலும் பார்க்க

ரோஜா மலா் கண்காட்சியைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் நடைபெற்று வரும் ரோஜா மலா் கண்காட்சியை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை கண்டு ரசித்தனா். நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா மலா் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது... மேலும் பார்க்க

வாசனை திரவிய கண்காட்சி நிறைவு

கூடலூரில் நடைபெற்ற வாசனை திரவிய கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக கூடலூா் மாா்னிங் ஸ்ட... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று உதகைக்கு வருகை

உதகை மலா் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் உதகைக்கு திங்கள்கிழமை வருகிறாா். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மலா் ... மேலும் பார்க்க