கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழப்பு
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சீகூா் வனச் சரகத்தில் உள்ள ஆனைகட்டி தெற்கு வனத்தில் வனப் பணியாளா்கள் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சிறுத்தை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து உயா் அதிகாரிகளுக்கு வனப் பணியாளா்கள் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
இதையடுத்து, கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையில் சிறுத்தையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, முக்கிய உறுப்புகள் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டன.
வேறொரு விலங்கு தாக்கியதில் சிறுத்தை இறந்திருக்கலாம் என்றும், உயிரிழந்தது சுமாா் 10 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.
இதையடுத்து, அதே இடத்தில் சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது.