பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கடந்த 4 ஆண்டுகளின் தேர்ச்சி விகிதம் என்ன?
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். இந்தாண்டும் மாணவிகள் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தேர்வு எழுதியவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 4 ஆண்டுகளின் தேர்ச்சி விகிதம்
2021:
தேர்வெழுதிய மாணவர்கள்: 8,16,473
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 8,16,473
தேர்ச்சி விகிதம்: 100%
2022
தேர்வெழுதிய மாணவர்கள்: 8,06,277
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 7,55,988
தேர்ச்சி விகிதம்: 93.76%
2023
தேர்வெழுதிய மாணவர்கள்: 8,03,385
தேர்ச்சிபெற்ற மாணவர்கள்: 7,55,451
தேர்ச்சி விகிதம் : 94.03%
2024
தேர்வெழுதிய மாணவர்கள்: 7,60,606
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 7,19,196
தேர்ச்சி விகிதம்: 94.56%
2025
தேர்வெழுதிய மாணவர்கள்: 7,92,494
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 7,53,142
தேர்ச்சி விகிதம்: 95.03%
பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.70%
100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை
கடந்த ஆண்டு - 2,478
இந்த ஆண்டு - 2,638
100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை
கடந்த ஆண்டு - 397
இந்த ஆண்டு - 436
தனித்தேர்வர்கள் தேர்ச்சி விவரம்
பிளஸ் 2 தேர்வு எழுதிய 8,019 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 7,466 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோன்று தேர்வு எழுதிய 140 சிறைவாசி மாணவர்களில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் தேர்வு எழுதிய 16,904 தனித்தேர்வகளில் 5,500 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.