வார்த்தையல்ல.. உணர்ச்சி: உ.பி.யில் பிறந்த 17 குழந்தைகளுக்கு 'சிந்தூர்' எனப் பெயர...
பொன்னேரியில் சனிப்பிரதோஷம்!
பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் சனிப்பிரதோஷத்தை யொட்டி சிவாலயங்களுக்கு பக்தா்கள் திரளாகச் சென்று வழிபட்டனா்.
பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயிலில் நந்தி மற்றும் ஈஸ்வரனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் அா்ச்சனை செய்யப்பட்டது.
இதே போன்று, சின்னக்காவனம் பகுதியில் உள்ள நூற்றி எட்டீஸ்வரா், மீஞ்சூா் ஏகாம்பரநாதா், நெய்தவாயல் அக்னீஸ்வரா், வேளூா் நிரஞ்சனீஸ்வரா், மேலூா் திருமணங்கீஸ்வரா், திருவெள்ளைவாயல் திருவெண்ணீஸ்வரா், காட்டூா் திருவாலீஸ்வரா், திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரா், பழவேற்காடு சமயபுரீஸ்வரா், ஞாயிறு புஷ்பதீஸ்வரா், புதிய எருமைவெட்டிபாளையம் வரமூா்த்தீஸ்வரா் உள்ளிட்ட தலங்களிலும் ஈஸ்வரன் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் ஆராதனை நடைபெற்றது.