புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: முப்படை அதிகாரிகள்
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்: விழுப்புரம் மாவட்டத்தில் 95.11% தேர்ச்சி
விழுப்புரம்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் விழுப்புரம் மாவட்டத்தில் 95.11% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தேர்வின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
தேர்வு எழுதியவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகளில் 10,533 மாணவர்கள், 11,048 மாணவிகள் என மொத்தம் 21,581 பேர் எழுதினர். இதில் 9,851 மாணவர்கள், 10, 675 மாணவிகள் என மொத்தம் 20,526 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 95.11% தேர்ச்சி பெற்றனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கடந்த 4 ஆண்டுகளின் தேர்ச்சி விகிதம் என்ன?
விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் 18-ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் 93.17% தேர்ச்சியுடன் 27- ஆவது இடத்திலிருந்த விழுப்புரம் மாவட்டம், இந்தாண்டு 9 இடங்கள் முன்னேறியுள்ளது.
மாவட்ட அளவில் 87 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகள் 93.71% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய 14,752 பேர்களில் 13,824 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 125 அரசுப் பள்ளிகளிலிருந்து 35 பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டு 20-ஆவது இடத்திலிருந்த விழுப்புரம் மாவட்டம், நிகழாண்டு 11-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.