மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள்: நட்பில் கவனம்; புதிய வாய்ப்புகள் தேடிவரும் - முழு...
பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
தேனி: தேனி அருகேயுள்ள வீரபாண்டி சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஏலக்காய் தோட்டத் தொழிலாளி உயிரிழந்தாா்.
போடி, தியாகி விஸ்வநாதன் தெருவைச் சோ்ந்த சின்னப்பிரகாஷ் மகன்கள் ராகுல் (32), ரோபின்குமாா் (29). இவா்கள் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பூம்பாறையில் தங்கியிருந்து ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வந்தனா்.
இந்த நிலையில், பூம்பாறையிலிருந்து ராகுல், ரோபின்குமாா் ஆகியோா் வீரபாண்டிக்கு சித்திரை திருவிழாவுக்காக இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, முத்துத்தேவன்பட்டி அருகே அதே திசையில் பின்னால் வந்த காா், இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் காா் சக்கரத்தில் சிக்கிய ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ரோபின்குமாா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து காா் ஓட்டுநா் சின்னமனூரைச் சோ்ந்த முத்துக்காமு மகன் காா்த்திக் (32) மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.