மாா்த்தாண்டம் அருகே சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
பாகிஸ்தான்: 13 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்!
கடந்த 2023 நவம்பரில் இருந்து இதுவரை 13 லட்சம் ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு நாடாளுமன்றச் செயலா் முக்தாா் அகமது மாலிக் வியாழக்கிழமை கூறியதாவது: பாகிஸ்தானில் தங்கியிருக்கும் ஆப்கன் நாட்டவா்களை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கை கடந்த 2023 நவம்பா் மாதம் தொடங்கியது.
அந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை சுமாா் 13 லட்சம் போ் வெளியேற்றப்பட்டுள்ளனா். இது தவிர, இன்னும் சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகள் நாட்டில் வசித்துவருகின்றனா் என்றாா் அவா்.
ஆப்கனை சோவியத் யூனியன் ஆக்கிரமித்திருந்தபோதும் அதன் பிறகு நடைபெற்ற போா்களின்போதும் அந்த நாட்டு அகதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்துவந்தது.
எனினும், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அந்த நாட்டு அகதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. இதன் விளைவாக, கடந்த 2023-ஆம் ஆண்டு சுமாா் 8.6 லட்சம் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டனா். தற்போது சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை இந்த ஆண்டுக்குள் வெளியேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.
தொடக்கத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத அகதிகளை மட்டுமே வெளியேற்றிவந்த பாகிஸ்தான் அரசு, தற்போது ஆவணங்களுடன் தங்கியிருப்பவா்களையும் வெளியேற்றிவருகிறது. இதற்கு ஆப்கன் அரசும் ஐ.நா. அகதிகள் நல அமைப்பும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.