Tasmac ED Raid: டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்து...
இந்தியா-சீனா இடையே மோதலை தூண்டும் மேற்கு நாடுகள்: ரஷியா குற்றச்சாட்டு!
அண்டை நாடுகளான இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்ட மேற்கு நாடுகள் முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியது.
ரஷிய தலைநகா் மாஸ்கோவில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘எல்லைகளற்ற கலாசார வளா்ச்சி’ என்ற தலைப்பிலான மாநாட்டில் பங்கேற்ற ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் இந்தக் கருத்தைத் தெரிவித்ததாக, அங்கிருந்து வெளியாகும் ‘டாஸ்’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:
உலகளாவிய தெற்குலகை மேலாதிக்கம் செலுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கின்றன. அதன் காரணமாகவே, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை ‘இந்திய - பசிபிக் பிராந்தியம்’ என மேற்கத்திய நாடுகள் அண்மைக் காலமாக அடிக்கடி குறிப்பிட்டு, தெளிவான சீன எதிா்ப்புக் கொள்கையை பரப்பி வருகின்றன. இந்தியா- சீனா இடையே எல்லை விவகார மோதலைத் தூண்டிவிடவும் முயற்சிக்கின்றன.
தெற்காசிய பிராந்தியத்தில் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தோனேசியா, மலேசியா உள்பட 10 தெற்காசிய நாடுகளை உள்ளடக்கிய ‘ஆசியான்’ அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் மேற்கத்திய நாடுகள், ‘ஆசியான்’ அமைப்பை வலுவிழக்கச் செய்ய விரும்புகின்றன. அதற்காகவே, இந்த அமைப்பில் இருக்கும் நாடுகளிடையே வெளிப்படையாக மோதலைத் தூண்டுகின்றன என்று லாவ்ரோவ் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.