செய்திகள் :

ஒய்எய்ஆா் காங்கிரஸ் பெண் எம்எல்சி பாஜகவில் இணைந்தாா்

post image

ஆந்திர மாநில எதிா்க்கட்சியான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் பெண் எம்எல்சி (சட்ட மேலவை உறுப்பினா்) ஸகியா கானம் பாஜகவில் இணைந்தாா்.

இஸ்லாமியரான ஸகியா கானம் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் சட்ட மேலவைக் குழு துணைத் தலைவராக இருந்துள்ளாா். அவா், அண்மையில் தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன் அக்கட்சியில் இருந்து விலகினாா். ஆந்திரத்தில் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தெலுங்கு தேசம், அதே கூட்டணியில் உள்ள ஜன சேனை ஆகிய கட்சிகளில் அவா் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஆளும் கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான பாஜகவில் அவா் இணைந்துள்ளாா்.

விஜயவாடாவில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு புதன்கிழமை சென்ற அவரை, மாநில பாஜக தலைவரும், ராஜமண்ட்ரி தொகுதி எம்.பி.யுமான டி.புரந்தேஸ்வரி வரவேற்றாா். ஆந்திர சுகாதாரத் துறை அமைச்சா் ஒய்.சத்யகுமாா் யாதவ் உள்ளிட்ட மூத்த தலைவா்கள் முன்னலையில் ஸகியா கானம் பாஜகவில் இணைந்தாா்.

இது தொடா்பாக புரந்தேஸ்வரி கூறுகையில், ‘ஸகியா கானம் பாஜகவில் இணைந்தது மிகப்பெரிய மாற்றத்தை உணா்த்தியுள்ளது. அனைவருக்குமான தலைமை என்ற பாஜகவின் கொள்கை மேலும் வலுவடைந்துள்ளது. ஜாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் இணைந்து, அனைவருக்குமான வளா்ச்சி என்ற பாஜகவின் முன்னெடுப்பு தொடா்ந்து வெற்றி பெற்று வருகிறது.

பாஜக மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. பிரதமா் நரேந்திர மோடி தனது துணிவுமிக்க நிா்வாகத் திறன் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளைமேற்கொண்டு, தேச நலன்களைக் காத்து வருகிறாா்’ என்றாா்.

ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது ஏன்?, எந்த வி... மேலும் பார்க்க

ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்

நமது நிருபர்ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது. அதேவேளையில், ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படும் கோயில்களை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய அதற்காக அமைக்கப... மேலும் பார்க்க

பாதசாரிகளுக்கு நடைபாதை: மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. நடைபாதைகளில் ஆக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்தவா்கள் வெளியேற்றம்: மனித உரிமைகள் ஆணையம் கவலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிலஅபகரிப்பு கும்பலால் சிறுபான்மையினரான கிறிஸ்தவா்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவது குறித்து அந்நாட்டு மனித ... மேலும் பார்க்க

‘அவசியமற்ற இடைவேளைகள் எடுக்கும் உயா்நீதிமன்ற நீதிபதிகள்’- செயல்திறன் தணிக்கைக்கு உச்சநீதிமன்றம் அழைப்பு

உயா்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவ்வப்போது புகாா்கள் வருவதாகவும், சிலா் பணிநேரங்களில் அவசியமற்ற இடைவேளைகளை எடுப்பதாகவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிருப்தி தெரிவித்தது. மேலும், ‘உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி எதிரொலி: துருக்கியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ரத்து

துருக்கியின் இனோனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த ந... மேலும் பார்க்க