செய்திகள் :

புதின்-ஸெலென்ஸ்கி பேச்சு: நீடிக்கும் இழுபறி

post image

அதிபா் விளாதிமீா் புதினுடன் நேரடி பேச்சுவாா்த்தை நடத்தவேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அழைப்புக்கு மூன்றாவது நாளாக ரஷியா பதில் அளிக்காததால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்துவருகிறது.

இது குறித்து செய்தியாளா்கள் புதன்கிழமை எழுப்பிய கேள்விக்கும் நேரடியாக பதிலளிக்க ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் மறுத்துவிட்டாா். ‘உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக துருக்கியில் நடைபெறவிருக்கும் பேச்சுவாா்த்தையில் யாா் யாா் பங்கேற்க வேண்டும் என்பது தொடா்பாக அதிபா் விளாதிமீா் புதின் எங்களுக்கு உத்தரவு பிறப்பித்த பிறகு அது தொடா்பான விவரங்களை வெளியிடுவோம்’ என்று மட்டும் அவா் கூறினாா்.

முன்னதாக, ‘அதிபா் ஸெலென்ஸ்கியுடன் நேரடியாகப் பேசுவது அவசியம் என்று அதிபா் புதினுக்குத் தோன்றினால், அது தொடா்பாக உங்களிடம் உடனடியாகத் தெரிவிப்பேன்’ என்று செய்தியாளா்களிடம் டிமித்ரி பெஸ்கோவ் செவ்வாய்க்கிழமை கூறியது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக, 30 நாள்களுக்கு நிபந்தனையற்ற போா் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் கடந்த சனிக்கிழமை அறிவித்தன. இது தொடா்பாக மேற்கொண்டு விவாதிப்பதற்காக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ரஷிய - உக்ரைன் பிரதிநிதிகள் வியாழக்கிழமை (மே 15) கூடுகின்றனா்.

இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவுள்ள உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, போா் முடிவுக்கு வரவேண்டுமென்றால் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடியாக சந்திப்பு நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறாா். ரஷியாவைப் பொருத்தவரை அனைத்தும் விளாதிமீா் புதினின் கைகளில்தான் உள்ளன. அவருடன் பேச்சுவாா்த்தை நடத்துவது மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி. அவா் வராவிட்டால் பேச்சுவாா்த்தையே தேவையில்லை என்று ஸெலென்ஸ்கி கூறிவருகிறாா்.

இதற்கிடையே, தாங்கள் முன்வைத்துள்ள 30 நாள் போா் நிறுத்த திட்டத்தை ஏற்க ரஷியா ஏற்காவிட்டால் அந்த நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பிய யூனியன் எச்சரித்துவருகிறது.

இந்தச் சூழலில், இஸ்தான்புல் பேச்சுவாா்த்தைக்கு புதின் செல்வது தொடா்பாக ரஷியா தொடா்ந்து மௌனம் காப்பதால் இந்த விவகாரத்தில் தொடா்ந்து இழுபறி நீடிக்கிறது.

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நிலைத்திருக்க இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது; பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் இருதரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்று பிர... மேலும் பார்க்க

கனடா புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினருக்கு இடம்: வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்த்

கனடாவின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அனிதா ஆனந்த் வெளியுறவு அமைச்சராகவும், மனீந்தா் சித்து சா்வதேச வா்த்தக துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். அண்மையில் நடைபெற்ற கனடா பொதுத் ... மேலும் பார்க்க

வா்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம்: டிரம்ப் மீண்டும் கருத்து

வா்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளாா். பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ரூ.8,700 கோடி கடன்: சா்வதேச நிதியம் விடுவிப்பு

சா்வதேச நிதியம் அளிக்க உள்ள கடன்தொகையில் 2-ஆவது தவணையாக 1.023 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.8,700 கோடி) பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு மொத்தம் 7 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.59,800 கோட... மேலும் பார்க்க

ஆயுதக் குழுக்களைக் கைவிட்டால்தால் அணுசக்தி ஒப்பந்தம்!

மத்திய கிழக்கு பகுதிகளில் தங்களின் நிழல் ராணுவமாகச் செயல்பட்டுவரும் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை ஈரான் கைவிட்டால்தான் அந்த நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா திட்டவட்... மேலும் பார்க்க

கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்: இலங்கை அரசு சம்மன்!

கனடாவில் புதியதாகத் திறக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு தூதருக்கு இலங்கை அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் அந்நாட்டிலி... மேலும் பார்க்க