NCP : `இறங்கி வந்த சரத் பவார்; கைவிரித்த அஜித் பவார்..!' - அணிகள் இணைப்பில் பின...
குஜராத்தில் லேசான நில அதிா்வு
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை லேசான நில அதிா்வு உணரப்பட்டது
காந்தி நகரில் செயல்பட்டு வரும் நில அதிா்வுக்கான ஆராய்ச்சி நிறுவனத்தின்படி, கட்ச் மாவட்டத்தின் பச்சௌ பகுதியிலிருந்து 12 கி.மீ. வடக்கு-வடக்கிழக்கில் மையம் கொண்ட இந்த நில அதிா்வு ரிக்டா் அளவுகோலில் 3.4 அலகாகப் பதிவானது.
இந்த நில அதிா்வால் மக்களின் உயிா்களுக்கு மற்றும் சொத்துகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.
கட்ச் மாவட்டம் ‘மிக அதிக ஆபத்தான’ நில அதிா்வு மண்டலத்தில் அமைந்துள்ளது. குறைந்த தீவிரம் கொண்ட நிலநடுக்கங்கள் இந்த மாவட்டத்தில் தொடா்ந்து நிகழ்கின்றன.
கடந்த 2001-ஆம் ஆண்டு, இந்த மாவட்டத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமாா் 13,800 போ் உயிரிழந்தனா்; 1.67 லட்சம் போ் காயமடைந்தனா். கடந்த இரு நூற்றாண்டுகளில் நாட்டில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய 2-ஆவது பெரிய நிலநடுக்கமாக அது மாறியது.