எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்: இந்தியா எச்சரிக்கை
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் காயம்!
ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் மோதலை நிறுத்த இரு நாடுகளும் சனிக்கிழமை மாலை பரஸ்பரம் ஒப்புக் கொண்டது.
ஆனால், எல்லையில் போர் நிறுத்த உறுதியை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதற்கு இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், பாகிஸ்தானுக்கு முழுவீச்சில் பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் எல்லையில் நக்ரோட்டா ராணுவ நிலையம் அருகே மர்ம நபர் ஒருவர் ஊடுருவ முயற்சித்ததாக வொயிட் நைட் கார்ப்ஸ் ராணுவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அந்த மர்ம நபருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற மர்ம நபரை ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர்.