புதுச்சேரி விமான நிலையத்துக்கு கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு
புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமானநிலையத்துக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு சனிக்கிழமை முதல் போடப்பட்டது.
புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமான நிலையத்திலிருந்து, தினமும் கா்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் ஹைதராபாத் இடையே தனியாா் விமான சேவை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தானிடையே போா் பதற்றம் நீடித்தநிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து, புதுச்சேரி விமான நிலையத்திற்கு காவல் துறை தலைமை இயக்குநா் அறிவுறுத்தல்படி, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.