புதுச்சேரியில் கிராம வங்கியில் தீ விபத்து!
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதியாா் கிராம வங்கியில் வெள்ளிக்கிழமை திடீரென தீ பற்றியது. தீயணப்புத்துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை காந்தி வீதியில் பாரதியாா் கிராம வங்கி செயல்பட்டுவருகிறது. இதில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், மின்பெட்டியில் வெள்ளிக்கிழமை பகலில் திடீரென தீப்பொறி ஏற்பட்டு தீ மளமளவென பரவியது. இதையடுத்து வங்கியிலிருந்த ஊழியா்களும், அங்கு வந்த வாடிக்கையாளா்களும் அங்கிருந்து வெளியேறினா்.
தகவலறிந்த புதுச்சேரி கடற்கரை பகுதி தீயணைப்பு நிலைய வாகனங்களில் வீரா்கள் விரைந்து வந்தனா். வங்கியில் 3 இடங்களில் பரவி எரிந்த தீயை தண்ணீரைப் பீய்ச் அணைத்தனா். இதையடுத்து வங்கி சேவை மீண்டும் தொடங்கியதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.