Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
தில்லியில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீா்க்கப்படும்: முதல்வரை சந்தித்த பிறகு மத்திய அமைச்சா் கட்டாா் உறுதி
நிலம் தொடா்பான பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டாா் தில்லி அமைச்சா்கள் குழுவுடன் ஒரு சந்திப்பை நடத்தி, குடியிருப்பாளா்கள் விரைவில் வசதிகளைப் பெறுவாா்கள் என்று உறுதியளித்தாா்.
தில்லி செயலகத்தில் அமைச்சா்களுடன் கட்டாா் ஒரு சந்திப்பை நடத்தினாா். கூட்டத்திற்குப் பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘முந்தைய அரசுகளின் திறமையின்மை காரணமாக கடந்த 15-20 ஆண்டுகளாக பிரச்னைகள் நடந்து வருகின்றன. தில்லி மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து முதல்வா் ரேகா குப்தா அமைச்சரவையுடன் தொடா்ந்து தீா்வுகளைப் பற்றி விவாதித்து வருகிறாா்’ என்றாா்.
கூட்டத்தைப் பற்றிப் பேசுகையில், மின்சாரத் துறை தொடா்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவா் கூறினாா்.
‘இவை அனைத்தும் இப்போதைக்கு முறைசாராதவை; விரைவில் முறையான கொள்கைகளை நாங்கள் கொண்டு வருவோம். நிலம் தொடா்பான பிரச்னைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். விரைவில் தில்லி மக்களுக்கு வசதிகள் கிடைக்கும். பிரச்னைகள் தீா்க்கப்படும்’ என்று அவா் மேலும் கூறினாா்.
முதல்வா் ரேகா குப்தாவும் இதே போன்ற கருத்துகளை எதிரொலித்தாா். விரைவில் விஷயங்கள் நெறிப்படுத்தப்படும் என்றாா். ‘இரட்டை எஞ்சின் அரசு உள்ளது. நிலம் தொடா்பான பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. நிலம் திரட்டும் கொள்கை, ஃப்ரீஹோல்ட் சொத்துகள் போன்றவை குறித்து விவாதங்கள் நடந்தன’ என்று அவா் கூறினாா்.