செய்திகள் :

சிவகாசி: பொது சுகாதார வளாகத்தை இடிக்க எதிர்ப்பு; கவுன்சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

post image

சிவகாசி மாநகராட்சியின் திருத்தங்கல் பகுதி 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் துரைப்பாண்டி. இவருடைய வார்டு பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகத்தை அதிகாரிகள் இடிக்க முயற்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி கவுன்சிலர்களிடையே விசாரித்தோம். அப்போது பேசியவர்கள், "சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கலில் செங்குளம் கண்மாய் உள்ளது.

மிரட்டல்

பல வருடங்களாக தூர்வாரப்படாமல் கிடந்த இந்த குளத்தை தன்னார்வலர் அமைப்பு சார்பில் புனரமைப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன்படி குளத்தை தூர்வாரி கண்மாய் கரையை பலப்படுத்துவது, மறுகால் கண்மாய் மதகு மற்றும் நீர் வழி ஓடை சீரமைப்பு பணிகளும் நடைபெற்ற வருகின்றன. இந்த நிலையில் செங்குளம் கண்மாயில் ஒரு பகுதி கரை சிவகாசி மாநகராட்சியின் 8-வது வார்டு பகுதிக்குள் வருகிறது. இந்த கரையொட்டிய பகுதியில் வாடகை வேன் ஸ்டாண்ட் மற்றும் பொது சுகாதார வளாகம் ஆகியவை உள்ளன. இதில் பொது சுகாதார வளாகம் கண்மாய் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பொது சுகாதார வளாகத்தின் கழிவுகள் கண்மாயில் கலப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும், நீர்நிலை அசுத்தம் மற்றும் சுகாதாரம் கருதி கண்மாய் சீரமைப்பு பணிகளுக்கு இடையூறாக உள்ளவற்றையும் பொது சுகாதார வளாகத்தையும் இடித்து அகற்றி நிலங்களை மீட்டு தரும்படி அனுமதி கேட்டு தன்னார்வலர்‌ அமைப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தது.

பெட்ரோல் தேனுடன்..
துரைபாண்டி

அதன்படி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு சிவகாசி மாநகராட்சிக்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணிக்காக ஜே.சி.பி. வாகனத்துடன் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்தனர். அப்போது கண்மாய் கரையையொட்டி உள்ள பொது சுகாதார வளாகத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சியின் 8-வது வார்டு கவுன்சிலர் துரைபாண்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பேசியவர், 'பொது சுகாதார வளாகம் 8-வது வார்டு மக்களின் தினசரி பயன்பாட்டில் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தும் இந்த வளாகத்தை மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் இடித்து அகற்றுவது கண்டிக்கத்தக்கது. மாற்று இடத்தில் பொது சுகாதார‌ வளாகம் கட்டியமைத்த பின்பு இதை இடியுங்கள்.‌ அதுவரை மக்கள் பயன்பாட்டிலேயே இந்த பொது சுகாதார வளாகம் இருக்கட்டும். மீறி, எந்த மாற்று ஏற்பாடும் செய்யாமல், இந்த வளாகத்தை இடித்தால் இங்குள்ளவர்கள் மீண்டும் கண்மாய் கரையை பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள். இதனால் சுகாதரக்கேடும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

மிரட்டல்

எனவே தற்சமயம் பொது சுகாதார‌ வளாகத்தை இடிக்கும் முயற்சியை கைவிடுமாறு' கூறியிருக்கிறார். ஆனால் அதிகாரிகள் தரப்பில் பொது சுகாதர‌ வளாகத்தை இடிப்பதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து ஆத்திரமடைந்த கவுன்சிலர் துரைபாண்டி, தனது டூவீலரில் வைத்திருந்த இருந்த பெட்ரோல் கேனை எடுத்துக்கொண்டு சரசரவென பொது சுகாதர‌ வளாக கட்டடத்தின் மீது ஏறினார். தொடர்ந்து, பொது சுகாதர வளாகத்தை இடிக்க முற்பட்டால் தான் இங்கேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. உடனடியாக பணிகள் நிறுத்தப்பட்டு கவுன்சிலர் துரைபாண்டியுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள், சரக காவல் துணை கண்காணிப்பாளர்‌, மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அதே பகுதியில் மாற்று இடத்தில் பொது சுகாதர வளாகம் கட்டி தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கவுன்சிலர் துரைபாண்டி சமாதானமடைந்து தீக்குளிக்கும் முயற்சியை கைவிட்டு கீழே இறங்கி வந்தார்" என்றனர். இந்த சம்பவம் திருத்தங்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பஹல்காம் பதிலடி: 15 நாள்களில் `ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தை இந்தியா எப்படி நடத்தியது? - முழு விவரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா தனது எதிர்தாக்குதலான "ஆபரேஷன் சிந்தூரை" நடத்தியுள்ளது.இந்த ”ஆபரேஷன் சிந்தூர்” நடத்த கடந்த இரண்டு வாரங்களாக அரசாங்கமும் பாதுகாப்பு ... மேலும் பார்க்க

Operation Sindoor : இந்தியாவின் துல்லிய தாக்குதலை விளக்கிய பெண் அதிகாரிகள்! - யார் இவர்கள்?

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 26 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதத் தாக்குதலு... மேலும் பார்க்க

"முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டாம்" - உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறி... மேலும் பார்க்க

பள்ளிக்கூடங்களின் அலட்சியம், கொல்லப்படும் பிஞ்சுகள், தாளாளர்கள் மட்டுமல்ல, அரசாங்கமும் குற்றவாளியே!

பள்ளிக்கூட தொழிலதிபர்களின் அலட்சியத்தால், கவனக்குறைவால், ஆள்வோர்கள் மற்றும் அதிகாரிகளின் லஞ்சம் மற்றும் ஊழல் வெறியால் பள்ளிக்கூட வளாகங்களில் குழந்தைகளின் உயிர்கள் தொடர்ந்து பறிக்கப்படுகிறது. சமீபத்திய... மேலும் பார்க்க

திருச்சி: பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் டிரோன் காட்சிகள்!

திருச்சி: பஞ்சப்பூர் | பேருந்து நிலையம்திருச்சி: பஞ்சப்பூர் | பேருந்து நிலையம்திருச்சி: பஞ்சப்பூர் | பேருந்து நிலையம்திருச்சி: பஞ்சப்பூர் | பேருந்து நிலையம்திருச்சி: பஞ்சப்பூர் | பேருந்து நிலையம்திருச... மேலும் பார்க்க

அதிகரிக்கும் தெருநாய்களின் எண்ணிக்கை: முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த 5 முக்கிய உத்தரவுகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 13 லட்சம் தெ... மேலும் பார்க்க