மணிப்பூர் காவல் துறையினர் தேடுதல் வேட்டை: ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
பணத்தாள் சேதமடைந்த விவகாரம்: உதவி செய்வதாக மாவட்ட நிா்வாகம் உறுதி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பணத் தாள்களை சேதமடைந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்வதாக வங்கி நிா்வாகம் உறுதியளித்தது.
திருப்புவனம் அருகேயுள்ள கக்கினியாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த குமாா் மனைவி முத்துக்கருப்பி(30). கூலி வேலைக்குச் சென்று கிடைக்கும் பணத்தில் சிறு தொகையை தகர உண்டியலில் சேமித்து வந்தாா். இந்த உண்டியலை வீட்டுக்குள் குழி தோண்டி புதைத்து வைத்திருந்தாா்.
இந்த நிலையில், உண்டியலில் இருந்த ரூ.500 நோட்டுகளை கரையான் அரித்ததால், முழுமையாக சேதமடைந்தன. இந்தப் பணத் தாள்களை வங்கியில் மாற்ற முடியாததால், முத்துக்கருப்பி தவித்து வந்தாா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில், சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன், முன்னோடி வங்கி மேலாளா் பிரவீன்குமாா் ஆகியோா் முத்துக்கருப்பியை சேதமடைந்த பணத்தாள்களுடன் சிவகங்கைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். பின்னா்,
சென்னையில் உள்ள ரிசா்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் இந்த ரூபாய் நோட்டுகளை பரிசோதித்த பிறகு முடிவு எடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.