மேஷம் - குருப்பெயர்ச்சி பலன்கள்: மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும்; நன்மைகள் என்...
தெருநாய் கடித்ததில் 10- க்கும் மேற்பட்டோா் காயம்
சிவகங்கை நகரில் தெருநாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
சிவகங்கை நகா் நேரு பஜாா், உழவா் சந்தை, பேருந்து நிலையம் பின்புறம் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் அண்மையில் சாலையில் நடந்து சென்ற 2 பெண்கள் உள்பட 10 -க்கும் மேற்பட்டோரை கடித்தன. இதில் காயமடைந்த அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதிலும், சிவகங்கை நகரில் வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 7 பேரை தெரு நாய்கள் கடித்தன. இவா்களும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
எனவே தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.