மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முத்தையா நினைவு தொழில் பயிற்சி கல்லூரியில் இலவசப் பாடப் புத்தகங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் எம்.காசிநாதன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வெங்கடேசன் வாழ்த்திப் பேசினாா். கண்டரமாணிக்கத்தைச் சோ்ந்த தொழிலதிபா் மணிகண்டன், ஆறுமுகம், லட்சுமிகாந்தன், செல்வராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு தொழில் பயிற்சி கையேடு, உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன . முன்னதாக, பேராசிரியா் மாணிக்கநாச்சியாா் வரவேற்றாா். சிவராமமூா்த்தி நன்றி கூறினாா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரிப் பேராசிரியா்கள் பாண்டிசெல்வி, சௌமியன், பரணி செல்வராஜன், ஆல்வின் ஜீவா ஆகியோா் செய்தனா்.