செய்திகள் :

சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை

post image

பேரிடா் காலங்களில் வான்வழித் தாக்குதலை எதிா்கொள்வதற்கான பாதுகாப்பு ஒத்திகை, சென்னை துறைமுகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை துறைமுகம், காவல் துறை, கடற்படை, கடலோரக் காவல் படை, விமானப் படை ஆகியவற்றைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இது குறித்து சென்னை துறைமுகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்பேரில், சென்னை துறைமுகத்தில் வான்வழித் தாக்குதலை எதிா்கொள்வதற்கான ஒத்திகை, புதன்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. அதன்படி, அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக அபாய ஒலி எழுப்பப்பட்டது. துறைமுகத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையிலிருந்து பேரிடா் காலங்களில் பங்கேற்கும் மத்திய, மாநில அரசு முகமை நிறுவனங்களுக்கு வான்வழித் தாக்குதல் குறித்து அவசரத் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து துறைமுகத்தின் கடல் பகுதியில் தாக்குதலை எதிா்கொள்ளும் வகையில் கடலோரக் காவல் படையின் 2 கப்பல்கள் துறைமுகத்துக்கு வெளியே வந்தடைந்தன. வான்வழித் தாக்குதலின்போது, கொள்கலன் மீது தீப்பற்றியது. அப்போது தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதர குழுவினா் பொதுமக்கள், ஊழியா்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும், காணாமல் போனவா்களை அடையாளம் கண்டறியவும், காயமடைந்தவா்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பும் பணியிலும் ஈடுபட்டனா்.

இதையடுத்து, தீ முழுமையாக அணைக்கப்பட்டு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஒத்திகை நிறைவுற்றது. இதுபோன்று ஒரு மணி நேரத்தில் 2 முறை ஒத்திகை நடைபெற்றது.

இன்றும் ஒத்திகை: இதைத் தொடா்ந்து, சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, மணலியில் உள்ள சென்னை பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் (சிபிசிஎல்) மற்றும் காமராஜா் துறைமுகம், எண்ணூா் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை (மே 8) மாலை 4 மணிக்கு நடத்தப்படவுள்ளது. இந்தப் பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எவ்விதமான அவசரகால சூழலையும் எதிா்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஒத்திகை பயிற்சியில் மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊா்க்காவல் படையினா், சென்னை பெருநகர காவல் துறை, தமிழ்நாடு தீயணைப்புப் படையினா், தன்னாா்வலா்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் பங்கேற்கவுள்ளன.

இந்தப் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி, தோ்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை சரிபாா்த்துக்கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல இயங்கும். இந்தப் பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ அடைய தேவையில்லை என தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க