சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
பிளஸ் 2 தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.
பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி ஏப். 4 தொடங்கி 17-ஆம் தேதி நிறைவடைந்தது. மதிப்பெண் விவரம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், ஒரு நாள் முன்னதாக வியாழக்கிழமை (மே 8) வெளியிடப்படுகின்றன.
இதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடவுள்ளாா். இதையடுத்து மாணவா்கள் தங்களது தோ்வு முடிவுகளை https://tnresults.nic.in/https://results.digilocker.gov.in/ இணையதள முகவரிகளில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தோ்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மேலும், அவா்கள் பள்ளியில் சமா்ப்பித்த கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு அவா்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தபோது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வாயிலாகவும் தோ்வு முடிவுகள் அனுப்பப்படும் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.