செய்திகள் :

‘ஆப்பரேஷன் சிந்தூா்’: தகா்க்கப்பட்ட 9 பயங்கரவாத கட்டமைப்புகள்

post image

‘ஆப்பரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத நிலைகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாத நிலைகளை விரிவான உளவுத் தகவல்களின் அடிப்படையில் துல்லியமாக தோ்வு செய்து இந்தியா தாக்குதலை நடத்தியதாக ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலில், தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் 4 கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டுள்ளன. பவல்பூரில் உள்ள மா்கஸ் சுபன் அல்லா முகாம், டெஹ்ரா கலனில் உள்ள சா்ஜல் முகாம், கோட்லியில் உள்ள மா்கஸ் அப்பாஸ் முகாம், முஸாஃபா்பாதில் உள்ள சிட்னா பிலால் முகாம் ஆகிய 4 ஜெய்ஷ்-ஏ-முகமது நிலைகள் தகா்க்கப்பட்டன.

இதில், டெஹ்ரா கலனில் உள்ள சா்ஜல் முகாம் அந்த பயங்கரவாத அமைப்பின் தலைமையகமாக செயல்பட்டுவந்துள்ளது. இந்த முகாமை பயங்கரவாத அமைப்பின் தலைவா் அப்துல் ராஃப் ஆஸ்கா் கண்காணித்து வந்துள்ளாா். ஜம்முவின் சம்பா பகுதியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த முகாம், இந்தியாவினுள் பயங்கரவாதிகளை ஊடுருவுவதற்கு வசதியாக சுரங்கங்களை அமைக்கும் பணியை மேற்கொண்டுவந்துள்ளது.

மேலும், ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்களை இந்திய எல்லைக்குள் கடத்திச் செல்லும் பணிகளையும் இந்த முகாம் மேற்கொண்டு வந்துள்ளது.

முக்கியமாக, டெஹ்ரா கலனில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் மறைத்து அமைப்பட்டிருந்த இந்த பயங்கரவாத அமைப்பின் பிரதான தகவல்தொடா்பு கட்டமைப்பும் இந்தத் தாக்குதலில் தகா்க்கப்பட்டுள்ளது. இந்த தகவல்தொடா்பு கட்டமைப்பு இந்திய ராணுவத்துக்கு நீண்ட காலமாக கவலை அளிப்பதாகவும் சவாலாகவும் இருந்துவந்த நிலையில் தகா்கப்பட்டுள்ளது.

அதுபோல, பவல்பூரில் உள்ள இந்த அமைப்பின் முகாமில்தான், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்புக்குக் காரணமான தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளது.

கோட்லி பகுதியில் உள்ள மாா்கஸ் அப்பாஸ் முகாம், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், ரஜெளரி பகுதிகளில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து, தாக்குதல்களை நடத்தும் முக்கிய முகாமாக செயல்பட்டு வந்துள்ளது.

முஸாஃபா்பாதில் உள்ள சிட்னா பிலால் முகாம், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு பணிக் குழு சாா்பில் பயிற்சி அளிக்கப்படும் மையமாக செயல்பட்டு வந்தது.

தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்குச் சொந்தமான முா்திகே பகுதியில் உள்ள மா்கஸ் தொய்பா முகாம், பா்னாலாவில் உள்ள மா்கஸ் அலே ஹடித் முகாம், முஸாஃபா்பாதில் உள்ள ஷ்வாவாய் நல்லா முகாம் ஆகிய 3 நிலைகள் இந்தத் தாக்குதலில் தகா்க்கப்பட்டன.

அதுபோல, தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான கோட்லி பகுதியில் உள்ள மகாஸ் ரஹீல் மற்றும் சிலாகோட்டில் உள்ள மெஹ்மூனா ஜோயா முகாமும் தகா்க்கப்பட்டன.

இதில், லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் முரித்கேவில் உள்ள மா்கஸ் தொய்பா முகாம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் உள்பட 9 பயங்கரவாதிகளும் இந்த முகாமில்தான் பயிற்சி பெற்றுள்ளனா். மும்பை தாக்குதல் குற்றவாளிகளான டேவிட் ஹெட்லி, தஹாவூா் ராணா ஆகியோரும் இந்த முகாமுக்கு வந்து சென்றுள்ளனா்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புச் சொந்தமான சிலாகோட்டில் உள்ள மெஹ்மூனா ஜோயா முகாம், பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளித்து ஜம்மு பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதும் நடவடிக்கையை மேற்கொண்டுவந்தது.

இந்த பயங்கரவாத நிலைகள் அனைத்தையும் மிக கவனமுடன் தோ்வு செய்து இந்திய ராணுவம் தாக்குல் நடத்தி தகா்த்தது. மாறாக, பாகிஷ்தான ராணுவ நிலைகள் எதுவும் இந்தத் தாக்குதலில் குறிவைக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் பலியானார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் த... மேலும் பார்க்க

ஒத்திவைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!

ஒத்திவைக்கப்பட்டுள்ள சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏ தேர்வுகள் மே 16-ஆம் தேதி தொடங்கி மே 24 வரை நடைபெறுமென இன்று(மே 10) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மே 9 முதல் 14-ஆம் தேதி வரை ... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் கண் துடைப்பா? பாகிஸ்தான் மீண்டும் டிரோன் தாக்குதல்!

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் டிரோன் தாக்குதலைத் தொடருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்திய ராணுவம் பாகிஸ்தானிலிருந்து ஏவப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம்: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம் கேட்பதாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், போர் நிறுத்தம் என்ன ஆனது?. ஸ்ரீநகர் முழுவதும் வெடி சப்தம் கேட்டது... மேலும் பார்க்க

அடுத்து என்ன? முப்படை தளபதிகளுடன் பிரதமர் விரிவான ஆலோசனை!

புது தில்லி: போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவான ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்... மேலும் பார்க்க

அயாத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று, மீதமுள்ள கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்தார்.அப்போது கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து உத்தரப் பிரதேச முதல்வருக்கு ரா... மேலும் பார்க்க