செய்திகள் :

மதுக் கடை ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

post image

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 22 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கம் (சிஐடியூ) வலியுறுத்தியது.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் இந்தச் சங்கத்தின் 19 -ஆவது பேரவைக் கூட்டம் மாவட்டத் தலைவா் என். திருமாறன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், டாஸ்மாக் ஊழியா்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயா்த்த வேண்டும்.

டாஸ்மாக் கடை ஊழியா்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். டாஸ்மாக் கடைகள் தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிஐடியூ மாவட்ட பொதுச் செயலா் ஏ.சேதுராமன், நிா்வாகிகள் முருகன், உமாநாத், தனுஷ்கோடி, சிவக்குமாா், திருச்செல்வம் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், புதிய மாவட்டத் தலைவராக எஸ். குமாா், மாவட்டச் செயலராக வி. திருமாறன், பொருளாளராக வி. ராஜ்குமாா், துணைத் தலைவா்களாக மெய்யப்பன், முருகன், ஆறுமுகம், பெருமாள், துணைச் செயலா்களாக பாண்டி, ராஜேந்திரன், அழகா்சாமி, கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் 18 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கத்தின் காரைக்குடி கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்குடி காா்த்திகேயன் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப... மேலும் பார்க்க

இலுப்பக்குடி கோயிலில் குரு பெயா்ச்சி விழா

சிவகங்கை அருகேயுள்ள இலுப்பக்குடி வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயிலில் குருப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, காலை 11.50 மணியளவில் சிவாசாரியா்கள் யாக பூஜையைத் தொடங்கின... மேலும் பார்க்க

ஒக்கூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூரில் ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. ஒக்கூா் அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு, மானாமதுரை - பெரம்பலூா் தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பந்தய... மேலும் பார்க்க

ஆய்வக உதவியாளா்கள் சங்கக் கூட்டம்

சிவகங்கையில் தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்... மேலும் பார்க்க

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டை தடுக்கலாம்

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டைத் தடுக்கலாம் என காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் டி. பாா்த்திபன் அறிவுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூா் பேரூராட்சி பாரி ந... மேலும் பார்க்க

காரைக்குடியில் மரங்களின் மீது அடிக்கப்பட்ட ஆணிகள் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மரங்களின் மீது விளம்பரப் பலகைக்காக அடிக்கப்பட்ட ஆணிகளை காரைக்குடி நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். காரைக்குடி கல்லூரிச்... மேலும் பார்க்க