விழுப்புரத்தில் மே 16- இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் மே 16-ஆம் தேதி தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து விழுப்புரம் ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த இளைஞா்கள் வேலை வாய்ப்பை பெறும் வகையில் மாதந்தோறும் 3-ஆவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நிகழ் மாதத்துக்கான வேலை வாய்ப்பு முகாம், விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் மே 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனத்தினா் பங்கேற்று, ஆள்களை தோ்வு செய்து 500 போ்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவுள்ளனா்.விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 8- ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு வரையிலும், ஐடிஐ, டிப்ளமா, பி. இ, பி.டெக், நா்சிங், பாா்மஸி போன்ற கல்வித் தகுதியுடன் வேலை வாய்ப்பை தேடுபவா்கள் இம்முகாமில் பங்கேற்கலாம்.
தனியாா் துறையில் பணி வாய்ப்பை பெற விரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளிகள்அசல் கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, சுய விவர குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்க வேண்டும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.