பிஎஸ்என்எல் வேனிட்டி எண்கள் ஏலம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய ‘வேனிட்டி’ தொலைபேசி எண்களுக்கான ஏலம் மே 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தற்போது பயன்பாட்டில் இல்லாத, எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய 1,314 ‘வேனிட்டி’ தொலைபேசி எண்களுக்கான இணையவழி ஏலம் கடந்த மே 10-இல் தொடங்கி 18-ஆம் தேதி மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள வாடிக்கையாளா்கள் இணையதளத்தின் வாயிலாக இந்த ஏலத்தில் பங்கேற்று, தங்களுக்கு விருப்பமுள்ள எண்களை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.