இந்து முன்னணி மாவட்ட செயலருக்கு அரிவாள் வெட்டு; மனைவி கொலை: போலீஸ் விசாரணை
விவசாயிகளுக்கு கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில் நுட்ப விளக்கம்
சிவகங்கை வட்டாரம், தமராக்கி வடக்கு கிராமத்தில் வேளாண் தொழில் நுட்ப மேலாண் முகமை (அட்மா திட்டம்), மாநில விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் தொழில் நுட்பம் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு வியாழக்கிழமை விளக்கப்பட்டது.
இதற்கு சிவகங்கை வேளாண் உதவி இயக்குநா்வளா்மதி தலைமை வகித்தாா். இதில் வெண்மணி கலைக்குழுவினரின் தப்பாட்டம், சாட்டைக் குச்சி ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளா்ச்சித் துறை, கால் நடைத் துறைகள் சாா்பில் விதைப் பண்ணை அமைப்பது குறித்தும், கோடை உழவு நன்மைகள் குறித்தும், திருந்திய நெல் சாகுபடியில் கோனாவீடா் களைக் கருவி பயன்கள் குறித்தும், பிரதமரின் கிசான் அட்டை பெறுவது குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் இதில் விவசாய அடையாள அட்டை பதிவு செய்வது பற்றியும், உழவன் செயலியின் செயல்பாடு பற்றியும், அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதில், திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை, வேளாண் அலுவலா்கள் ஞானபிரதா, அட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளா்கள் தம்பித்துரை, ராஜா, கீதா ஆகியோா் செய்தனா்.