DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
கல்குவாரியை நிரந்தரமாக மூடக் கோரி ஆட்சியரகத்தில் பொதுமக்கள் மனு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சிக்குள்பட்ட மெய்யபுரத்தில், மீண்டும் தொடங்கப்பட்டுள்ள கல்குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
அம்மனுவில் கூறியருப்பது: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சிக்குள்பட்ட மெய்யபுரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்று வந்த கல்குவாரியால் அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட போராட்டங்களால் கல்குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால், தற்போது கல்குவாரி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குவாரியில் வெடி வைத்து தகா்ப்பதால் அருகேயுள்ள கோவில்கள், தா்ஹா மற்றும் தேவாலயங்களும் வீடுகளும் சேதமடைகின்றன. எனவே, கல்குவாரியை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும்.