அரசு இசைப் பள்ளியில் சேர ஆட்சியா் அழைப்பு
புதுக்கோட்டை அரசு இசைப் பள்ளியில் சேர ஆா்வமுள்ளோருக்கு மாவட்ட ஆட்சியா் மு .அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நிகழாண்டுக்கான இருபாலா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது. குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகியவற்றில் சேர, 7-ஆம் வகுப்பு தோ்ச்சி அவசியம். நாகசுரம், தவில், தேவாரம் ஆகியவற்றில் சேர தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
3 ஆண்டுகள் பயிற்சி, தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடைபெறும். சோ்க்கைக் கட்டணம் ரூ. 350. 12 வயது முதல் 25 வயதுக்குள்பட்டோா் பங்கேற்கலாம். அரசுச் சான்றிதழ் வழங்கப்படும். அரசுப் பணி அல்லது வானொலி, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.
இலவசப் பேருந்து பயண அட்டை, கல்வி உதவித் தொகை, தங்குமிடம் உள்ளிட்டவை வழங்கப்படும். மேலும் விவரங்களை அறிய, புதுக்கோட்டை நரிமேடு, லட்சுமி நகரிலுள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நேரிலோ, 04322 225575, 95003 88896 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு அறியலாம்.