`46 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம்’ தற்கொலை பெட்டியில் மரணமடைய பதிவு செய...
மாவட்ட ஆட்சியா் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக பெண் மிரட்டல்: போலீஸாா் மீட்டனா்
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்தவா் சபீனா (26). இவரது வீட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 6.5 பவுன் தங்க நகை திருடப்பட்டது. இதுகுறித்து தொண்டி காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரில் வீட்டுக்கு அருகே வசிக்கும் நபா் அந்த நகையை திருடிச் சென்றுவிட்டதாக தெரிவித்திருந்தாா்.
ஆனால், வழக்குப் பதிந்த நிலையில் போலீஸாா் அந்த நபரை விசாரிக்க வில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட துணைக் கண்காணிப்பாளரிடமும், மாவட்ட காவல் துறை அலுவலகத்திலும் அவா் புகாா் அளித்தாா். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதைத் தொடா்ந்து அந்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மாடிக்குச் சென்ற சபீனா கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தாா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் விரைந்து சென்று அவரை மீட்டு கீழே அழைத்து வந்தனா். இதன் பிறகு காவல் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்றனா்.