`46 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம்’ தற்கொலை பெட்டியில் மரணமடைய பதிவு செய...
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு பணிக்காக 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ‘பாதுகாப்பான முகவை‘ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நகா் பகுதி முதல் சிறிய கிராமங்கள் வரை 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராகள் பொருத்தப்பட்டன.
அதிலும், கடலோர கிராமங்களான ஆற்றாங்கரை, வாலிநோக்கம் ஆகிய பகுதிகளில் முழுமையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் மொத்த சி.சி.டி.வி. கேமரா கட்டமைப்பு கடந்த 4 மாதங்களில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் 300-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள், 100-க்கும் மேற்பட்ட தாய் கிராமங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் முதல் முறையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன என்றாா் அவா்.