முத்தூரில் ரூ.10.84 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை
முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்கள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3.6 டன் தேங்காய், 6 டன் எள், 1.1 டன் தேங்காய்ப் பருப்பு ஆகியவற்றை விற்பனைக்குக் கொண்டுவந்தனா்.
இதில் ஒரு கிலோ தேங்காய் ரூ.38 முதல் ரூ.57.20 வரையிலும் ரூ.1.74 லட்சத்துக்கும், தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.120.20 முதல் ரூ.175.30 வரை ரூ.1.91 லட்சத்துக்கும், எள் கிலோ ரூ.91.59 முதல் ரூ.128.66 வரை ரூ.7.19 லட்சத்துக்கும் விற்பனையாயின.
இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.10.84 லட்சம் மதிப்பிலான விளைபொருள்கள் விற்பனையாயின என்று விற்பனைக் கூட கண்காணிப்பாளாா் து.சங்கீதா தெரிவித்தாா்.