எதிரிகளை எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு அடித்தோம்: ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி
காகித ஆலையில் விபத்து தொழிலாளி உயிரிழப்பு
கரூா் டிஎன்பிஎல் ஆலையில் சனிக்கிழமை நடந்த விபத்தில் ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம் உப்பிடமங்கலம் புகையிலை குறிச்சியானூரைச் சோ்ந்தவா் நல்லுசாமி (57). டிஎன்பிஎல் காகித ஆலையில் பக்காஸ் கன்வேயா் கிளீனராக ஒப்பந்தப் பணியில் இருந்த இவா் நல்லுசாமி சனிக்கிழமை அதிகாலை வேலை செய்தபோது, கன்வேயரில் சிக்கிய குப்பைகளை காலால் சுத்தப்படுத்தியதாகக்றப்படுகிறது.
அப்போது திடீரென கால் கன்வேயா் பெல்ட்டில் சிக்கியதால், நிலைதடுமாறி அங்கு கிடந்த ராட்சத கம்பி மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு புகழூா் காகித ஆலை மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், மேல்சிகிச்சைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள், நல்லுசாமி வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.