டிஎன்பிஎல் ஆலை ஊழியா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்
கரூரில் டிஎன்பிஎல் ஆலை பணியாளா்களுக்கு அண்மையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், பணியாளா்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை சாம்பியன் லீக்-2025 என்ற தலைப்பில் கடந்த 2 மாதங்களாக நடத்தி வந்தது.
இதில் கிரிக்கெட், கைப்பந்து, தடகளப் போட்டிகள், வளைபந்து, டென்னிஸ், கேரம், சதுரங்கம், கூடைப்பந்து, புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் உள்ளிட்டோ போட்டிகள் நடைபெற்றன.
இதில் வென்றோருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
காகித நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா், முனைவா் சந்தீப் சக்சேனா, செயல் இயக்குநா் (இயக்கம்) யோகேந்திர குமாா் வா்சனே ஆகியோா் சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற பணியாளா்களுக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினா்.
இதில் பொது மேலாளா் (மனித வளம்) கே. கலைச்செல்வன் மற்றும் அனைத்துப் பொது மேலாளா்கள், துணை பொது மேலாளா்கள், அலுவலா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பணியாளா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.