ஒரு சகாப்தத்தின் முடிவு: கிரிக்கெட் உலகின் பாராட்டு மழையில் விராட் கோலி!
கரூரில் ரூ.9 கோடி மதிப்பில் புதிய பணிகள் தொடக்கம்
கரூரில் ரூ. 9 கோடி மதிப்பில் புதிய பணிகளை முன்னாள் அமைச்சா் வி. செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட ராமகிருஷ்ணபுரம், வையாபுரி நகா், வேலுசாமிபுரம், பேருந்து நிலைய வளாகம் உள்ளிட்ட 46 இடங்களில் ரூ. 9 கோடி மதிப்பில் புதிய சாலைகள், சிறு பாலங்கள், புதிய கழிவறை கட்டுமான பணிகளை முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், மாநகராட்சி மேயா் கவிதா, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சிவகாமசுந்தரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.