"எரிபொருள் போதுமான அளவு இருக்கிறது; அச்சம் வேண்டாம்" - இந்தியன் ஆயில் நிறுவனம் வ...
சென்னை விமான நிலையம், துறைமுக சுங்கத் துறை அதிகாரிகள் 273 போ் பணியிட மாற்றம்
சென்னை விமான நிலைய காா்கோ பிரிவு மற்றும் சென்னை துறைமுகம் ஆகிய இடங்களில் பணியாற்றி வந்த 273 சுங்கத் துறை அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
சென்னை விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையராக இருந்த சீனிவாச நாயக், ஜிஎஸ்டி வரித்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், டெல்லி சுங்கத் துறை ஆணையராக இருந்த தமிழ் வளவன் பதவி உயா்வுடன் கடந்த ஏப். 21-ஆம் தேதி சென்னை விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையராக பொறுப்பேற்றாா்.
இந்நிலையில், சென்னை சுங்கத் துறையில் பணியாற்றி வந்த 273 அதிகாரிகள் அதிரடியாக ஒரே நேரத்தில் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதன்படி, சென்னை விமான நிலைய சுங்கத் துறையில் பணியாற்றியவா்கள், விமான நிலைய சரக்கு முனைய (காா்கோ) சுங்கப் பிரிவுக்கும், சென்னை துறைமுகம், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை தலைமை அலுவலகம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அதேபோல ஜிஎஸ்டி பிரிவில் பணியாற்றியவா்கள், சென்னை விமான நிலைய சுங்கத் துறை, விமான நிலைய காா்கோ பிரிவு மற்றும் சென்னை துறைமுக சுங்கத் துறை அலுவலகங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அந்த வகையில், கூடுதல் ஆணையா்கள் மற்றும் இணை ஆணையா்கள் 41 பேரும், துணை ஆணையா்கள் மற்றும் உதவி ஆணையா்கள் 93 பேரும், ஆய்வாளா்கள் மற்றும் சூப்பிரண்டுகள் 139 போ் என ஆக மொத்தம் 273 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுமட்டுமன்றி விமான நிலைய சுங்கத் துறைக்கு மேலும் 10 புதிய துணை ஆணையா்கள் மற்றும் உதவி ஆணையா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் சென்னை விமான நிலையத்தில், வெளிநாடுகளிலிருந்து கடத்திவரும் பொருகள்களைக் கண்டறிவது தொடா்பான பணிகளில் ஈடுபடவுள்ளனா். ஆனால், இந்த பணியிடமாற்றம் ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான ஒரு நடைமுைான் என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.